யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 67 பேர் வீடு திரும்பினர் : வௌிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 67 பேர் வீடு திரும்பினர் : வௌிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவிப்பு

பாதுகாப்புப்‌ படைத்‌ தலைமையகம்‌ (யாழ்ப்பாணம்‌), 52ஆவது தரைப்‌ படைத் தலைமையகம்‌ மற்றும்‌ 521ஆவது காலாட்‌ படைப் பிரிவின்‌ கீழ்‌ பராமரிக்கப்பட்டு வருகின்ற வசாவிளான்‌ தனிமைப்படுத்தல்‌ மையத்தில்‌ தனிமைப்படுத்தப்பட்டிருந்த சவுதி அரேபியா, கட்டார்‌, குவைத்‌, சைப்பிரஸ். ஜோர்தான்‌ ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த 67 பேர்‌ இரண்டு வாரங்கள்‌ தனிமைப்படுத்தப்படுத்தலை நிறைவு செய்து இன்று (15) தத்தமது வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்‌.

கதிர்காமம், காவத்தை, காலி, அம்பாறை ஆகிய பிரதேசங்களில்‌ காணப்படும்‌ தமது வீடுகளிற்கு செல்வதற்குரிய போக்குவரத்து வசதிகள்‌, சிற்றுண்டிகள்‌, மதிய உணவுப் பொதிகள்‌, குடிநீர போன்ற வசதிகளும்‌ இராணுவத்தினரால்‌ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பாதுகாப்புப்‌ படைகளின்‌ பிரதானியும்‌, இராணுவத் தளபதியும்‌ மற்றும்‌ கொவிட்‌-19 வைரஸ்‌ தடுப்பு மையத்தின்‌ பிரதானியுமான ஜெனரல்‌ ஷவேந்திர சில்வாவின்‌ எண்ணக்கருவிற்கு அமைவாகவும்‌ பாதுகாப்பு படைத்‌ தலைமையகம்‌ (யாழ்ப்பாணம்‌) கட்டளைத்‌ தளபதி மற்றும்‌ யாழ்‌. கொவிட்-19 தடுப்பு மையத்தின்‌ இணைப்பாளருமான மேஜர்‌ ஜெனரல்‌ பியந்த பெரேராவின்‌ மேற்பார்வையின்‌ கீழும்‌ இத்தனிமைப்படுத்தல்‌ செயற்பாடானது இடம்பெற்றது.

மேலும்‌ இச்சந்தர்ப்பத்தில்‌ 521ஆவது காலாட்‌ படைப் பிரிவின்‌ படைத் தளபதி பிரிகேடியர்‌ மஹேன்‌ சல்வதுர உட்பட இராணுவ உயரதிகாரிகளால்‌ தனிமைப்படுத்தலில்‌ இருந்த அனைவருக்கும்‌ சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டிருந்தது.

பின்னர்‌ குறித்த தனிமைப்படுத்தல்‌ மையத்தில்‌ தனிமைப்பட்டு இருந்தவர்கள்‌ தமக்கு தேவையான வைத்திய உதவிகள்‌, உணவு மற்றும்‌ குடிபான வகைகள்‌, பாதுகாப்புகள்‌ மற்றும்‌ தமக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும்‌ வழங்கியமைக்காக இராணுவத்தினருக்கு மனதார நன்றி பாராட்டியிருந்தமையும்‌ குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad