லிபிய கடலில் கவிழ்ந்தது படகு : 57 பேர் பலி, 18 பேர் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

லிபிய கடலில் கவிழ்ந்தது படகு : 57 பேர் பலி, 18 பேர் மீட்பு

லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்ததில் 57 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த தகவலை புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபா மிஷெலி தெரிவித்துள்ளார்.

லிபியாவின் மேற்கு கடலோர நகரமான கும்சியிலிருந்து படகு ஒன்று கடந்த 25 ஆம் திகதி புறப்பட்டுள்ளது. அதில் அகதிகள் 75 பேர் இருந்துள்ளனர். நடுக்கடலில் அந்தப் படகு நேற்று கவிழ்ந்ததில் ஏறக்குறைய 57 பேர் உயிரிழந்தனர்.

படகில் இருந்த ஆபிரிக்காவைச் சேர்ந்த 18 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் படகுகளில் செல்லும்போது மத்திய தரைக் கடலில் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது.

லிபியாவிலிருந்து அண்மைக் காலமாக இவ்வாறு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் இவ்வாறு சென்ற 7,000 க்கும் அதிகமானோர் நடுக் கடலில் வழிமறிக்கப்பட்டு லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டு உள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment