(செ.தேன்மொழி)
புதையல் அகழ்வுகள் உட்பட சட்டவிரோத அகழ்வுகள் தொடர்பான 37 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் ஈடுபட்ட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
கடந்த வருடம் மாத்திரம் இத்தகைய அகழ்வுகள் 44 பதிவாகியிருந்ததுடன் இன்போது 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவான சட்டவிரோத அகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், வட மத்திய மாகாணத்திலும் குறிப்பிட்ட தொகை அகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு புராதன சொத்துக்கள் மற்றும் பாதுகாப்பு வனங்கள், காட்டுப் பகுதிகளை சேதம் படுத்தும் வகையில் திட்டமிட்டே மேற்கொள்ளப்படும் அகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இவ்வாறான நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment