23 நிறுவனங்கள் அமெரிக்க தடுப்பு பட்டியலில் சேர்ப்பு : விசனம் தெரிவித்துள்ள சீனா - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

23 நிறுவனங்கள் அமெரிக்க தடுப்பு பட்டியலில் சேர்ப்பு : விசனம் தெரிவித்துள்ள சீனா

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 23 சீன நிறுவனங்களை ஜோ பைடன் நிர்வாகம், அமெரிக்க வர்த்தக நிறுவன தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பொருளாதார தடுப்புப் பட்டியலில் 23 சீன நிறுவனங்களை யு.எஸ். வணிகத்துறை சேர்த்துள்ளதாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை விமர்சித்தது.

இந்நிலையில் இது குறித்து ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ள சீனாவின் வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கையில், சீன நிறுவனங்களை தடுப்பு பட்டியலில் சேர்ப்பது "சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளின் கடுமையான மீறல்" மற்றும் சீன நிறுவனங்களை "நியாயமற்ற முறையில் அடக்கும் செயற்பாடு" என்று கூறியுள்ளது.

அதேநேரம் சீனா “சீனாவின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சின்ஜியாங்கில் சினாவின் மனித உரிமை மீறல்கள், வெகுஜன தடுப்புக் காவல் மற்றும் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு போன்ற காரணங்களை முன் நிறுத்தி அமெரிக்க வர்த்தகத் துறை அதன் தடுப்புப்பட்டியலில் 23 சீன நிறுவனங்களை கடந்த வெள்ளியன்று சேர்த்தது.

No comments:

Post a Comment