இலங்கையில் 2,250 கர்ப்பிணித் தாய்மாருக்கு கொரோனா : 170 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை : 13 பேர் மரணம் - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

இலங்கையில் 2,250 கர்ப்பிணித் தாய்மாருக்கு கொரோனா : 170 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை : 13 பேர் மரணம்

நாட்டில் 2,250 கர்ப்பிணித் தாய்மார் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 170 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை கர்ப்பிணித் தாய்மார் 13 பேர் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மொடர்னா மற்றும் பைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு குடும்ப சுகாதார பணியகம் சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுவரை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீன உற்பத்தியான சைனோபார்ம் தடுப்பூசி மாத்திரமே வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த பணியகத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad