இலங்கை ஆசிரிய சங்க செயலாளர் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, July 16, 2021

இலங்கை ஆசிரிய சங்க செயலாளர் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக, கடந்த ஜூலை 08ஆம் திகதி பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறித்த கைது நடவடிக்கையின் போதும், தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் போதும் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர்கள் 8 நாட்களின் பின்னர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டிருந்த, முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் இன்று வீடு திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment