மாவிலகம என்னும் பிரதேசத்தில் நேற்று 30-06-2021 மரண வீடொன்றிற்கு சென்றிருந்த ஐவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியிருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
இவ்வாறு தொற்று உறுதியான ஐவர், சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், குறித்த மரண வீட்டில், இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட 36 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர், அவரவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.
இத்தகவல்களை ஊவா மாவிலகம பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அனைவரும் உறுதிப்படுத்தினர்.
தொற்று உறுதியான ஐவருக்கும் 30-06-2021ல் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டதையடுத்து, இன்று (01-07-2021) கிடைக்கப் பெற்ற முடிவுகளின் அடிப்படையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment