ஒலிம்பிக்கில் ஜப்பானுக்கு தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்தார் 13 வயதுடைய வீராங்கனை - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

ஒலிம்பிக்கில் ஜப்பானுக்கு தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்தார் 13 வயதுடைய வீராங்கனை

திங்கட்கிழமை (இன்று) நடைபெற்ற பெண்களுக்கான முதல் ஒலிம்பிக் ஸ்கேட்போர்ட் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த மோமிஜி நிஷியா வெற்றி பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது தங்கப் பதக்கத்தை ஜப்பான் நாட்டின் இளம் வீரர் யூட்டோ ஹொரிகோம் வென்ற ஒரு நாள் கழித்து, ஒசாக்காவைச் சேர்ந்த 13 வயதுடைய நிஷியா ஜப்பானுக்கு மீண்டும் தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

நிஷியா 15.26 மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு ஜப்பானிய வீராங்கனையான 16 வயதுடைய ஃபூனா நகயாமா 14.49 மதிப் பெண்களுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதேநேரம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 13 வயதான ரெய்சா லீல் 14.64 மதிப்பெண்களுடன் வெள்ளி பதக்கம் பெற்றார்.

நிஷியாவுக்கு முன்னர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இளம் வயதுடைய வீரர் என்ற சாதனையை 14 வயதில் பார்சிலோனாவில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் கியோகோ இவாசாகி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment