ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி உயிரிழப்பு : 10 பேரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ள பொலிஸார் - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி உயிரிழப்பு : 10 பேரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ள பொலிஸார்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு - பொரளை, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

16 வயதும் 8 மாதங்களுமான குறித்த சிறுமி, கடந்த ஜூலை 03ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) மரணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டு நீதவான் மரண பரிசோதனையைத் தொடர்ந்து, சடலத்தின் பிரேதப் பரிசோதனை இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் பொரளை பொலிஸாரினால் 10 பேரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த அறிக்கைகள் மற்றும் ஏனைய சாட்சியங்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சம்பவம் தொடர்பான முடிவை நீதிமன்றம் அறிவிக்கவுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad