எதிர்க்கட்சித் தலைவர் சஜித், மனைவி ஜலனி வீடு திரும்பினர் - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

எதிர்க்கட்சித் தலைவர் சஜித், மனைவி ஜலனி வீடு திரும்பினர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த மே 22ஆம் திகதி தனது மனைவிக்கு மேற்கொண்ட PCR சோதனையில் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து தனக்கும் கொவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக, சஜித் பிரேமதாஸ தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த இருவரும் கொழும்பிலுள்ள தனியார் வைத்திசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

அதற்கமைய, அவர்களுக்கு நேற்று மேற்கொண்ட PCR சோதனையின் முடிவுகளின் அடிப்படையில் இன்று (11) முற்பகல் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ தங்கள் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்றையதினம் (11) முற்பகல் கங்காரம விகாரைக்குச் சென்ற தம்பதியினர் மத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad