அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து சென்றடைந்தார் ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து சென்றடைந்தார் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து சென்றடைந்துள்ளார். 

ஐரோப்பாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன், பிரிட்டனில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார். 

பின்னர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளார்.

அத்துடன் பிரஸ்ஸல்சில் இடம்பெறும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான பேச்சுக்கள் மற்றும் வரும் 16 ம் திகதி ஜெனீவாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சந்திப்பு உட்பட முக்கிய நிகழ்வுகளில் ஜோ பைடன் பங்கேற்கிறார். 

புடினுடனான ஜோ பைடனின் சந்திப்பு முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமெரிக்க - ஐரோப்பிய உறவுகளில் சற்று விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் பைடனின் பயணத்தில் இந்த விரிசல்கள் சீர்படுத்தபடும் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment