மலையக மக்களுக்கு சகல பக்கமிருந்தும் பிரச்சினைகள் வந்தால் அவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள் ? : கேள்வி எழுப்பினார் இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

மலையக மக்களுக்கு சகல பக்கமிருந்தும் பிரச்சினைகள் வந்தால் அவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள் ? : கேள்வி எழுப்பினார் இராதாகிருஷ்ணன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தெளிவான திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தினாலேயே நாளுக்குநாள் கொவிட் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சகல பக்கமிருந்தும் மலையக மக்களுக்கு பிரச்சினைகள் வந்தால், அந்த மக்கள் எவ்வாறு அவற்றை சமாளிப்பார்களெனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பியனார். 

அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் நிலைமைகளால் மலையக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை. இதனாலேயே தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

மலையகப் பகுதிகளில் லயன்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை காரணமாக கொரோனா வைரஸ் மலையகப் பகுதிகளில் வேகமாகப் பரவுகிறது.

தொழிலாளர்களுக்கு மூன்று நாள் வேலைகளே வழங்கப்படுகின்றன. இந்த மூன்று நாள் வேலையிலும் தொழிலாளர்கள் 20 கிலோ கொழுந்து பறிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பெருந்தோட்டங்களை பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வகையில் நிர்வகிக்கிறார்கள். 

இரசாயன உரங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையின் பாதிப்பையும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கப்பட்டுள்ளது. 

எல்லாப் பக்கங்களில் இருந்து மலையக மக்களுக்குப் பிரச்சினைகள் வந்தால், அந்த மக்கள் எவ்வாறு சமாளிப்பார்கள் ? பெருந்தோட்டங்களில் என்ன வகையான நிர்வாகங்கள் நடக்கின்றன? எல்லோரும் இஷ்டப்படி நடந்து கொள்கின்றனர். தொழில் ஆணையாளரும், பொலிஸாரும் இவை எதனையும் கண்டுகொள்வதில்லை என்றார்.

No comments:

Post a Comment