தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள ‘தோர்’ என்னும் சிங்கத்துக்கு தற்போது நோய் நிலைமை முற்றாக நீங்கியுள்ளதுடன் இந்த சிங்கத்திடமிருந்து ஏனைய மிருகங்களுக்கு பரவாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிருகக்காட்சிசாலையில் வசிக்கும் வன விலங்குகள் மற்றும் கொவிட்19 தொற்று ஏற்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக இந்தியாவில் மிருகக்காட்சிசாலைகளில் அனுபவமும், அறிவுமுள்ள மிருக வைத்தியர்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அது அந்த மிருகங்களின் நலன்கருதி எடுக்கப்பட்டதேயன்றி தனிப்பட்ட இலாபத்துக்காக அல்லவென தெரிவித்துள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலை சிங்கத்துக்கு ஏற்பட்ட நோய் நிலைமை தொடர்பாக தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்கள பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய மிருகக்காட்சி திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்பு, யானை வேலி, மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் காடுகளை மீள அமைத்தல் மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு அரச திணைக்களமாகும்.
மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் வசிக்கும் மிருகங்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு வழங்கல் திணைக்களத்தின் நிர்வாக அதிகார சபையின் பொறுப்பாகும்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வசித்த தோர் என்னும் சிங்கம் கடந்த 12ஆம் திகதி சுகவீனம் அடைந்தமை தெஹிவளை மிருகக்காட்சிசாலை பிரதிப் பணிப்பாளரின் அன்றாட கள விஜயத்தின் போதே கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சிங்கத்துக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் ஒக்சிஜன் வழங்க, நீராவி பிடிக்க மிருகக்காட்சி சாலை நிர்வாக அதிகார சபைக்கு நேரடியாக தலையிட வேண்டி நேரிட்டது. தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மிருக வைத்திய அதிகாரிக்கு தேவையான வசதிகளை, மருந்துகளை மற்றும் உபகரணங்கள் பெற்றுக் கொடுப்பதென அனைத்து நடவடிக்கைகளையும் மிருகக்காட்சி சாலை திணைக்கள நிர்வாக சபை வழங்கியது.
தற்போது இந்த நோய் நிலைமை சிங்கத்திடமிருந்து ஏனைய மிருகங்களுக்கு பரவாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டுள்ளோம். அதேவேளை அதனுடன் இருந்த ஸினா என்னும் பெண் சிங்கத்துக்கும் நோய்த்தொற்றுமென ஆரம்பத்தில் இருந்தே நாம் எதிர்பார்த்தோம்.
மிருகக்காட்சிசாலையின் நிர்வாக அதிகார சபை மிருக வைத்தியர்களின் ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாது தான்தோன்றித்தனமாக செயல்படுவதாக, இலங்கை மிருக வைத்தியர்கள் சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் சுமத்திய பொய் குற்றச்சாட்டை நாம் நிராகரிக்கின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மிருகங்களின் நலன் குறித்து கருத்தில் கொள்ளாது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த சங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து கவலை தெரிவிக்கின்றோம்.
12 ஆம் திகதி நோய்வாய்ப்பட்ட சிங்கம் தற்போது நோய் அவதானம் நீங்கி நலமடைந்து வருகின்றது. 25 ஆம் திகதி இலங்கை மிருக வைத்தியர்களின் சங்கத்தால் மிருகக்காட்சிசாலை திணைக்களத்துக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி அவர்களின் சங்கத்தால் மேற்கொண்ட நடவடிக்கை மிருகக்காட்சி சாலை நிர்வாக அதிகார சபையை சிரமத்துக்குள்ளாக்குவதற்காக அல்ல என குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வேளையில் எமது திணைக்களம் ராகம வைத்திய கல்லூரியுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என். பி. சுனில்சந்திர உள்ளிட்ட குழுவினர் மிருகங்களின் நோய் தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குவதோடு மிருகக்காட்சிசாலையின் பணியாளர்களின் பி.சீ.ஆர் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ள தாமாக முன்வந்துள்ளதையிட்டு நாம் அவர்களை பாராட்ட வேண்டும். அத்துடன் தொடர்ந்தும் எமக்கு அளிக்கும் ஒத்துழைப்புக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தியாவில் பல மிருகக்காட்சிசாலைகளில் சிங்கங்களுக்கு covid-19 தொற்று ஏற்பட்டுள்ளது முழு உலகமும் அறிந்த விடயமாகும். எமது நாட்டில் இதற்கு முன்னர் இவ்வாறு தொற்று ஏற்பட்ட விலங்கு அடையாளம் காணப்படாததால் அவற்றிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அனுபவம் எமக்கு இல்லை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.
மிருகக்காட்சிசாலைகளில் வசிக்கும் வன விலங்குகள் மற்றும் கொவிட்19 தொற்று ஏற்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக இந்தியாவிலும் மிருகக்காட்சி சாலைகளில் அனுபவமும் அதற்கான அறிவும் உடைய மிருக வைத்தியர்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தெரிவிக்க விரும்புகிறேன்.
No comments:
Post a Comment