ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பசில் ராஜபக்ஷவை தேசியபட்டியலூடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து அவருக்கு உகந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென கட்சியின் 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரும் கையெழுத்திட்டுள்ள கடிதத்தை ஜனாதிபதியை சந்தித்து அவரிடம் கையளித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கட்டியெழுப்புவதற்கு மாபெரும் பங்களிப்பை வழங்கிய நபரென்ற வகையில் இன்னமும் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லையாயின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பெரும் தடையாக இருக்குமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
தமது குழுவினர் சமர்ப்பித்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி சாதகமான சமிக்ஞைகளை தெரிவித்ததாகவும் பசில் ராஜபக்ஷ தரப்பில் முன்பிருந்தளவுக்கு எதிர்ப்பு அலைகள் இல்லையெனவும் வெகு சீக்கிரமேயே தங்களது எதிர்பார்ப்பு நிறைவேறிவிடுமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment