(செ.தேன்மொழி)
மோட்டார் சைக்கிள் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், நொச்சியாகம மற்றும் தம்புத்தேகம ஆகிய பகுதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 11 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமன்றி பெண்களின் கைப்பைகளையும் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் சுமார் ஐந்து வருட காலமாக இவ்வாறு கொள்ளைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அநுராதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment