கிளிநொச்சியில் பசு மாட்டை இறைச்சியாக்கிய திருடர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

கிளிநொச்சியில் பசு மாட்டை இறைச்சியாக்கிய திருடர்கள்

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை இன பசு மாட்டை களவாடி இறைச்சியாக்கியுள்ளனர் என மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்வாதாரமாக வளர்க்கும் கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

நேற்றைய தினமும் (13) உருத்திரபுரம் 10ம் வாய்க்கால் பகுதியில் வீட்டில் கட்டிவிடப்பட்ட பால் தருகின்ற உயர் ரக பசு மாட்டினை களவாடி உருத்திரபுரம் பொது மயானத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்திற்குள் இறைச்சியாக்கி விட்டு பசு மாட்டின் தலை தோல்களை விட்டு சென்றுள்ளனர்.

சுமார் 80,000 ரூபா பெறுமதிக்கு மேலான குறித்த பசு மாடு தற்சமயம் பால் தருகின்ற நிலையில் இறைச்சி ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உரிமையாளர், அண்மைய நாட்களாக ஆடு, மாடு, கோழிகள் என்பன தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment