தாய்வானின் வான் பாதுகாப்பு பகுதிக்குள் பறந்த சீன இராணுவ விமானங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

தாய்வானின் வான் பாதுகாப்பு பகுதிக்குள் பறந்த சீன இராணுவ விமானங்கள்

சுமார் 28 சீன இராணுவ விமானங்கள் செவ்வாயன்று தாய்வானின் வான் பாதுகாப்பு பகுதிக்குள் பறந்தன என்று அதன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விமானங்களில் ஜே-16 விமானங்கள் பதினான்கும் ஜே-11 விமானங்கள் ஆறும் அணுசக்தி திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்கள் உட்பட பல்வேறு வகையான போர் விமானங்களும் இருந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேட்டோ தலைவர்கள் திங்களன்று சீனா முன் வைக்கும் இராணுவ சவால் குறித்து எச்சரித்ததை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜனநாயக தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கும்போதிலும் பீஜிங், தாய்வானை பிரிந்து செல்லும் ஒரு மாகாணமாக கருதுகிறது.

கடந்த ஜனவரி 24 ஆம் திகதி இதேபோன்ற ஒரு பணியில் 15 விமானங்களும், ஏப்ரல் 12 ஆம் திகதி 25 ஜெட் விமானங்களும் தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment