தடுப்பூசி வழங்கும் தீர்மானம் விசேட வைத்திய நிபுணர் குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டது, கட்டாய கையொப்பம் என்று சிலர் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றனர் : கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

தடுப்பூசி வழங்கும் தீர்மானம் விசேட வைத்திய நிபுணர் குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டது, கட்டாய கையொப்பம் என்று சிலர் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றனர் : கெஹெலிய ரம்புக்வெல்ல

நாட்டிலுள்ள சூழ்நிலைக்மைய நோய் பரவாமல் தடுக்க, ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவதற்கான முடிவு விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட குழுவினால் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று (1) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர், நேற்று கண்டி பிதேசத்தில் பொதுமக்களுக்கு ஸ்பூட்னிக் தடுப்பூசி வழங்கும்போது, ஒரு டோஸ் மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது எனக்கூறி பொதுமக்களிடமிருந்து கையொப்பம் பெற்றிருப்பதாகவும், அது யாருடைய அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்டது என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான, கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார் .

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நிபுணர் குழு மேற்கொள்ளும் தீர்மானத்தை செயற்படுத்துவதாகவும், இது தொடர்பாக தினமும் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.

மேலும், உலகில் 7.8 பில்லியன் மக்கள் தொகையுடன், 193-194 நாடுகளின் குழு போட்டியினூடாக இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றன. உலகின் வல்லரசு நாடுகள் தமது தேவைக்கும் அதிகமான தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருப்பதாகவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த சிறந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம், இது தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், இது நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்த நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு திட்டமாகும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும், ஒரு சாதாரண சத்திர சிகிச்சையில் கூட, தொடர்புடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள கையொப்பமொன்று பெறப்படுகின்றது, ஆனால் கண்டியில் தடுப்பூசியின் போது கையொப்பமிட்டது கட்டாய கையொப்பம் என்று சிலர் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment