காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் காத்தான்குடியில் நடமாடும் வாகனத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பணை செய்யும் நடவடிக்கை இன்று (01.06.2021) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.தையூப் தலைமையில் இந்த நடமாடும் விற்பணை நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் பால்மா, சீனி, கடலை, நெத்தலிக்கருவாடு, பருப்பு, பூடு, பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நடமாடும் விற்பணை நடவடிக்கை ஆரம்ப வைபவம் காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இன்று (01) நடைபெற்றது.
இதில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு காலடியில் அத்தியாவசியப் பொருட்களை நியாய விலையில் பெற்றுக் கொள்ளும் பொருட்டு காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் வாகத்தின் மூலம் நடமாடும் விற்பணை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.தையூப் தெரிவித்தார்.
எம் எஸ் எம் நூர்தீன்
No comments:
Post a Comment