கூடுதல் விபரம் கேட்டு சீனாவை கட்டாயப்படுத்த முடியாது - உலக சுகாதார நிறுவனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

கூடுதல் விபரம் கேட்டு சீனாவை கட்டாயப்படுத்த முடியாது - உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தோற்றம் குறித்த கூடுதல் தரவுகளை வெளியிட சீனாவைக் கட்டாயப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா அவசர கால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் மாநாடொன்றில் தெரிவிக்கையில், "இது தொடர்பாக யாரையும் கட்டாயப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அதிகாரம் இல்லை" என தெரிவித்துள்ளார்

இதற்கிடையில், அவர் உறுப்பு நாடுகளிடமிருந்து முழு 'ஒத்துழைப்பை' எதிர்பார்க்கிறார். "அந்த முயற்சியில் எங்கள் அனைத்து உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு, உள்ளீடு மற்றும் ஆதரவை நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம்" என்று ரியான் கூறினார்.

கொரோனா வைரஸ் “அடுத்த நிலைக்கு” எங்கு தோன்றியது என்பதை அறிந்து கொள்ள தேவையான ஆய்வுகளை உலக சுகாதார அமைப்பு முன்மொழிகிறது என தெரிவித்தார்.

சீனாவின் வுகான் நகரில்தான் கொரோனா வைரஸ் உருவானது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.

சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை.

வுகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா பரவியதாகக் கருதப்படுகிறது. அதே சமயம், கொரோனா வைரசை சீனா தனது வுகான் பரிசோதனைக் கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

எனவே, கொரோனா எப்படி தோன்றியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சீனாவுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர். 

உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்றனர். இது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா தோற்றம் குறித்த கூடுதல் தரவுகளை வெளியிட சீனாவைக் கட்டாயப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் "அடுத்த நிலைக்கு" எங்கு தோன்றியது என்பதை அறிந்து கொள்ள தேவையான ஆய்வுகளை உலக சுகாதார நிறுவனம் முன்மொழிகிறது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad