அல் கைதாவுக்கும், தலிபானுக்கும் இடையில் பிளவுகள் கிடையாது - ஐ.நா - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

அல் கைதாவுக்கும், தலிபானுக்கும் இடையில் பிளவுகள் கிடையாது - ஐ.நா

தலிபான் இயக்கத்துக்கும் அல் கைதா இயக்கத்துக்கும் இடையிலான உறவில் எந்த விரிசலும் கிடையாது என்றும் அவற்றின் முக்கிய தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நட்புறவு, திருமண பந்தம், இணைந்து போராடுவதால் ஏற்படும் பரஸ்பர நம்பிக்கை போன்றவற்றால் இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு நெருக்கமாகக் காணப்படுவதாகவும் ஐ.நா. சபையால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. கண்காணிப்பு குழு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

தலிபானின் ஆப்கானிய இஸ்லாமிய இராச்சியத்தின் பிரதித் தலைவரான சிராஜுதீன் ஹக்கானி, அல்கைதா தலைமைத்துவ உறுப்பினராகவும் இருப்பதை இவ்வறிக்கை இதற்கான ஆதாரமாக சுட்டிக்காட்டுகிறது. 

பரந்த அளவிலான அல் கைதாவின் தலைவர்களில் ஒருவராக விளங்கினாலும் அவ் வியக்கத்தின் உள்ளக அமைப்பான ஹத்தின் சூரா கவுன்சில் உறுப்பினராக அவர் இல்லை என்றும் உளவுத் தகவல்களை ஆதாரம்காட்டி இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

அல்கைதாவின் தற்போதைய உண்மையான கட்டமைப்பு எவ்வாறுள்ளது என்பதில் போதிய தகவல்கள் இல்லை. எனினும் இக்கட்டமைப்பின் மிக முக்கியமான உறுப்பாக ஹத்தின் சூரா விளங்குகிறது. 

எகிப்தியரான சயிஃப் அல் அடெல் என்பவரை பிரதித் தலைவராகக் கொண்ட ஈரானிய ஜிஹாதிகளை உள்ளடக்கியதாக இச்சூரா குழு இயங்கி வருவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment