இந்தோனேசியாவின் கட்டாயத் தொழிலாளர்களை பயன்படுத்தியதாகக் கூறி சீன மீன்பிடி நிறுவனத்தின் கடல் உணவு இறக்குமதிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
டாலியன் ஓசியன் பிசிங் நிறுவனத்தின் 32 படகுகளில் உள்ள தொழிலாளர்கள் உடல் ரீதியாக வன்முறைக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் அவர்களின் சம்பளங்கள் நிறுத்தப்பட்டு துஷ்பிரகோங்களுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க துறைமுகங்களுக்கு நுழையும் குறித்த சீன நிறுவனங்களின் கடல் உணவு உற்பத்திகளை உடன் பறிமுதல் செய்வதற்கு உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தின் அங்கமான சுங்க நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய தொழிலாளர்களுடன் தொடர்புபட்ட வர்த்தகங்களை தடுப்பதற்கு அமெரிக்க நிர்வாகம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதை இது காட்டுவதாக உள்ளது.
No comments:
Post a Comment