கடனாளிகளான வியாபாரிகளுக்கும், தனி நபர்களுக்கும் சலுகை : ஜூன் 21 இற்கு முன் எழுத்து மூலம் கோருமாறு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

கடனாளிகளான வியாபாரிகளுக்கும், தனி நபர்களுக்கும் சலுகை : ஜூன் 21 இற்கு முன் எழுத்து மூலம் கோருமாறு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

'கொவிட்‌-19 மூன்றாம்‌ அலையினால்‌ பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும்‌ தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை வழங்குமாறு, வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்‌-19 உலகளாவிய நோய்த் தொற்றின்‌ மூன்றாம்‌ அலை காரணமாக உரிமம் பெற்ற வங்கிகளின்‌ கடன் பெறுர்நகள்‌ எதிர்கொண்டுள்ள இன்னல்களை கருத்திற் கொண்டு, குறித்த கோரிக்கையை முன்வைப்பதாக, இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலம் அதற்கான கோரிக்கையை முன்வைக்குமாறு, கடன் பெறுநர்களுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் குறித்த அறிவிப்பு வருமாறு



No comments:

Post a Comment