போலி ஆவணங்களுடன் பிரவேசிப்போருக்கு ஐந்து வருட சிறை, 50,000 ரூபா அபராதம் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

போலி ஆவணங்களுடன் பிரவேசிப்போருக்கு ஐந்து வருட சிறை, 50,000 ரூபா அபராதம் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

போலி ஆவணங்களை தம் வசம் வைத்துக் கொண்டு கொழும்பு நகரம் உள்ளிட்ட நகரங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு இணங்க மேற்படி தண்டனை வழங்கப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பயணத் தடையை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீதி செயற்படுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு பெருமளவிலானோர் கொழும்பு நகருக்குள் கடந்த 31ஆம் திகதி பிரவேசித்துள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment