2012 தொடக்கம் 2014 காலப்பகுதியில் ஜெர்மனி சான்செலர் அங்கேலா மேர்கல் உட்பட ஐரோப்பிய அரசியல்வாதிகளை வேவுபார்க்கும் அமெரிக்காவுக்கு டென்மார்க்கின் உளவுப் பிரிவு உதவி இருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்துடன் டென்மார்க்கின் பாதுகாப்பு உளவுச் சேவை கூட்டிணைந்து தகவல்களை சேகரித்திருப்பதாக டென்மார்க் வானொலி குறிப்பிட்டுள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன் மற்றும் நோர்வே அதிகாரிகளின் உளவுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டு 2013 ஆம் ஆண்டிலும் சுமத்தப்பட்டது. அப்போது ஜெர்மனி சான்செலரின் தொலைபேசி, அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தினால் ஒட்டுக் கேட்கப்பட்டதாக அமெரிக்க உளவு இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் குறிப்பிட்டிருந்தார்.
ஜெர்மனி அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவலை ஐரோப்பாவின் பல செய்தி நிறுவனங்களும் பகிர்ந்துள்ளன.
No comments:
Post a Comment