முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு - பெண்ணொருவர் காயம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு - பெண்ணொருவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் இன்று மலை 5.30 மணிக்கு இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 64 வயதுடைய முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணியில் இருந்த குப்பைகளை கூட்டி நெருப்பு வைத்த போது அதிலிருந்த குண்டு வெடித்ததில் குறித்து அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அம்மன் கோயில் வீதி, 5 ஆம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் 64 வயதுடைய இந்திரன் மரியரெத்தினம் எனும் பெண்ணே காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த பகுதியில் வேறு வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றனர்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment