(எம்.மனோசித்ரா)
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில அதற்கான பொறுப்பினை ஏற்று பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பானது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை அறிக்கையொன்றினை வெளியிட்டு பொதுஜன பெரமுன இவ்வாறு அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என்று வலிறுத்தியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்தினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில், 'கொவிட் பரவல் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், எரிபொருள் விலையையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டமைக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பினை ஏற்றுக் கொண்டு அவர் பதவி விலக வேண்டும் ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment