நாட்டு மக்களிடம் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

நாட்டு மக்களிடம் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் காணப்படுகின்ற கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டே பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். எவ்வாறிருப்பினும் 14 ஆம் திகதியின் பின்னர் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படாவிட்டால் சகலரும் தமது பொறுப்பை உணர்ந்து மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் காணப்படுகின்ற கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டே பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். 14 ஆம் திகதிக்கு பின்னர் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என்று தற்போது ஸ்திரமாகக்கூற முடியாது.

எனவே எதிர்வரும் வாரங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படாவிட்டால் சகலரும் தமது பொறுப்பை உணர்ந்து மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

போக்குவரத்து கட்;டுப்பாடுகள் தளர்வு என்பது சுதந்திரமாக நடமாடுவதற்கல்ல. எனவே ஒவ்வொருவரும் தமது போக்குவரத்துக்களை கட்டுப்படுத்தி சமூக இடைவெளியைப் பேணி மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.

இதன் போது கொவிட் மரணங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மரணமொன்று இடம்பெற்ற பின்னர் அதற்கான காரணம் குறித்து அறிவிக்கக் கூடிய காலம் தொடர்பில் ஸ்திரமாகக்கூற முடியாது.

உயிரிழந்த நபரின் நிலைமை, மரணம் இடம்பெற்ற சந்தர்ப்பம், மரணம் இடம்பெற்ற விதம் அதாவது கொலை அல்லது திடீர் மரணங்கள் உள்ளிட்டவை பல விடயங்கள் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்கும் முன்னர் அவதானம் செலுத்தப்படும். சில மரணங்களுக்கான காரணிகள் தொடர்பில் ஆராய்வதற்கு பல வருட காலமும் செல்லும்.

கொவிட் நிலைமைக்கு மத்தியில் பதிவாகும் மரணங்கள் தொடர்பில் பின்பற்றப்பட்ட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே அதற்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுத்து அவற்றை நிறைவு செய்யும் வரை மரணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது. சிக்கலுக்குரிய மரணங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதிலேயே கால தாமதம் ஏற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment