அநுராதபுரத்தில் இரு யானைகள் உயிரிழப்பு : விசாரணைகளை ஆரம்பித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

அநுராதபுரத்தில் இரு யானைகள் உயிரிழப்பு : விசாரணைகளை ஆரம்பித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம்

அநுராதபுரம் மாவட்டத்தின் ஹொரவபொத்தானை மற்றும் திறப்பனை பொலிஸ் பிரிவுகளில், இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அநுராதபுரம் பண்டுளகம அலுவலக உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவின் வலஹவித்தவெவ பகுதியிலுள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியொன்றில் சிக்கியே இந்த யானைகள் உயிரிழந்துள்ளன.

இச்சம்பவம் கடந்த (05) இரவு இடமபெற்றுள்ளது. இறந்தவற்றில் கொம்பன் யானையொன்றும் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திறப்பனை பொலிஸ் பிரிவின் லபுநோருவ மொறகொடவெவ குளத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மற்றொரு காட்டு யானை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.

விவசாயி ஒருவரினால் கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இவ்விரு யானைகளும் உயிரிழந்தமை பற்றித் தெரிய வந்தது. இவை உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

(அநுராதபுரம் தினகரன் நிருபர்)

No comments:

Post a Comment