பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்த ஈரானிய கடற்படைக் கப்பல்..! - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்த ஈரானிய கடற்படைக் கப்பல்..!

ஈரானிய கடற்படைக் கப்பலொன்று, பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகமான ஜாஸ்க் அருகே ஈரானி கடற்படைக் சொந்தமான கப்பலொன்றே இன்று (2) புதன்கிழமை  இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த கப்பலிலிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் தீயணைப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், குறித்த கப்பல், பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே தீ பற்றி எரிந்து, விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், கப்பலில், தீ பிடித்தது குறித்த தகவல்கள் ஏதும் தற்போது வரை தெரியப்படாத நிலையில், சம்பவம் குறித்து கடற்படையினர் மேலதில விசாரணை மெற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment