கிழக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றாளர்கள் : இதுவரை 141 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

கிழக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றாளர்கள் : இதுவரை 141 பேர் பலி

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து 10 ஆயிரத்தை அண்மித்துள்ளது. இதுவரை 9187 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கிழக்கில் குறிப்பாக 3 வது அலையில் தொற்றுக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 3 வது அலையில் இதுவரை 5322 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 9187 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவிற்கு 141 பேர் பலியாகியுள்ளனர். கடந்த இரு அலைகளைவிட இந்த மூன்றாவது அலையில் மரண விகிதம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இரண்டாம் அலையின் போது மொத்தமாக 26 என்றிருந்த மரணத் தொகை மூன்றாவது அலையின் போது நான்கு மடங்கையும் தாண்டி தற்போது 115 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி மொத்த பலியுயிர் தொகை 141 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றுவேகம் மட்டு நகரில் அதிகம்
கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் அசுர வேகத்தில் தொற்றுக்கள் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பில் தினம்தினம் நூற்றுக்கு மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.

அங்கு கடந்த ஏழு நாட்களில் 718 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 2555 பேர் மொத்தமாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதிகரித்து வரும் தொற்றாளர்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கட்டில்கள் நிரம்பி வழிகின்றதாகவும் இன்னும் அதிகரிப்பின் தொற்றாளர்களை மேறு மாவட்டத்திற்கே அனுப்ப வேண்டி நேரிடுமென பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 2360 பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் 1201 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1525 பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 236 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கிழக்கில் கொரோனா முதல் அலையில் 23 பேரும் இரண்டாவது அலையில் 3842 பேரும் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது அலையில் இதுவரை 5322 பேர் இலக்காகியுள்ளனர்.

14 பேர் மரணம்
கிழக்கில் இதுவரை 140 பேர் மரணித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 82 பேரும், அம்பாறைப் பிராந்தியத்தில் 17 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 15 பேரும் மரணித்துள்ளனர்.

கிழக்கில் முதலிரு அலைகளில் 26 பேர் பலியாகியிருந்தனர். ஆனால் மூன்றாவது அலையில் இதுவரை 115 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கிலுள்ள 10 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 757 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப் நிருபர்

No comments:

Post a Comment