மண்முனைப்பற்று எல்லை நிர்ணய ஆலோசனைக் கூட்டத்திற்கு முஸ்லிம் பிரமுகர்கள் அழைக்கப்படாமைக்கு மட்டு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ரமழான் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

மண்முனைப்பற்று எல்லை நிர்ணய ஆலோசனைக் கூட்டத்திற்கு முஸ்லிம் பிரமுகர்கள் அழைக்கப்படாமைக்கு மட்டு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ரமழான் கண்டனம்

எம்.எஸ்.எம்.நூருதீன் 

மண்முனைப்பற்று எலலை நிர்ணய ஆலோசனைக் கூட்டத்திற்கு முஸ்லிம் பிரமுகர்கள் அழைக்கப்படாமல் தீர்மானம் எடுக்கப்பட்டதை வன்மையாக கண்டிப் பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே. றம்ழான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மண்முனைப்பற்று பிரதேசத்தின் புதிய எல்லைகளை நிர்ணயிக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அப்பிரதேச எல்லைக்குள் சுமார் 26 சதவீதமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் சார்பாக எவரும் அழைக்கப்படவில்லை என்பது கவலையான விடயமாகும். 

அவ்வாறு முஸ்லிம் பிரமுகர்கள் அழைக்கப்படாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தீர்மானமும் எதிர்காலத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தப் போவதில்லை இவ்வாரான செயற்பாடுகளுக்கு அப்பகுதியின் புத்தி ஜீவிகள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

கடந்த மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம் உறுப்பினர்களின் வாக்குகளை முழுமையாக பெற்று அரியாசனம் ஏறியவர்கள் இது விடயத்தில் மௌனம் காப்பது அவர்கள் மீது முஸ்லிம்களும் முஸ்லிம் உறுப்பினர்கலும் கொண்டிருந்த அதித நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அன்று மண்முனைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு முஸ்லிம் உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு பகீரதப்பிரயத்தனம் செய்த அந்த தவிசாளரும் அவர் சார்ந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இந்த அதி முக்கிகியத்துவமிக்க எல்லை நிர்ணய விடயத்தில் முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டு செயற்படாமையானது சுயநல அரசியலை மீண்டுமொரு முறை ஞாபகப்படுத்தியுள்ளது.

இவ்வாரான செயற்பாடுகளால் மீண்டும் மீண்டும் இரு இனங்களுக்குமிடையே குரோத மனப்பாங்கை ஏற்படுத்தாமல் எதிர்காலத்தில் இரு இனங்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு குறித்த எல்லை நிர்ணய விடயத்தை மீள்பரிசீலனை செய்து இரு இனங்களும் திருப்திப்படக் கூடிய நல்லதோர் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் அதுவே எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment