வவுனியாவில் திடீர் பரிசோதனையில் சுகாதார அதிகாரிகள் - நிதி நிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

வவுனியாவில் திடீர் பரிசோதனையில் சுகாதார அதிகாரிகள் - நிதி நிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் விசேட மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறிய நிதி நிறுவனங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வவுனியா கடை வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனங்கள், மற்றும் வியாபார நிலையங்களில் நேற்று காலை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை பேணாமை, மற்றும் ஊழியர்களின் எண்ணி்கையினை அதிகமாக அழைத்து செயற்பட்ட இரண்டிற்கும் மேற்பட்ட பிரபல நிதிநிறுவனங்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது.

இதேவேளை கிராமப்புற பகுதிகளிலும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பலசரக்கு விற்பனை நிலையங்களும் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட்பீரிஸ், பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு மற்றும் சுகாதார பரிசோதகர்களால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad