உலகின் பெரும் இறைச்சி விநியோக நிறுவனத்தில் இணையத் தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

உலகின் பெரும் இறைச்சி விநியோக நிறுவனத்தில் இணையத் தாக்குதல்

பிரேசிலைச் சேர்ந்த ஜே.பி.எஸ் இறைச்சி விநியோக நிறுவனம் மீதான இணையத் தாக்குதல் ரஷ்யாவில் உள்ள சட்டவிரோத அமைப்பால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

உலகின் மிகப் பெரிய இறைச்சி விநியோகிப்பாளரான ஜே.பி.எஸ், கடந்த செவ்வாய்க்கிழமை இணையத் தாக்குதலுக்கு உள்ளானது. 

தாக்குதலுக்குத் தீர்வு காண்பதில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஜே.பி.எஸ் கூறியது. மேலும், இன்றைக்குள் நிறுவனத்தின் பெரும்பாலான வளாகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிடும் என்று அது கூறியது.

இணையத் தாக்குதலால், அவுஸ்திரேலியாவில் உள்ள ஜே.பி.எஸ்ஸின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன. அமெரிக்காவில், கால்நடைகளை வெட்டும் பணிகளும் நிறுத்தப்பட்டன.

இணையத் தாக்குதல் குறித்து அமெரிக்கா, ரஷ்ய அரசாங்கத்தைத் தொடர்பு கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கூறினார். 

“பொறுப்புள்ள நாடுகள், இணையத் தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளை மறைத்து வைத்திருக்காது” என்று ரஷ்யாவிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஜே.பி.எஸ் மீதான இணையத் தாக்குதலை அடுத்து, இறைச்சி விலை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. சீனாவுக்கான இறைச்சி ஏற்றுமதியும் பாதிப்படையலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment