எதியோப்பியாவின் டைக்ராய் மாகாணத்தில் உள்ள 90 வீதமான மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
“டைக்ராய் மாகாணத்தில் நிகழ்வது நமக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. அம்மாகாணத்தில் நிலவும் மோதல் காரணமாக சுமார் 90 வீத மக்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஐ.நா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் இனக்குழுக்களிடம் மோதல் நிலவுகிறது. எங்களுக்கு இது கவலையளிக்கிறது. இந்த ஆண்டு இறுதிவரை டைக்ராய் மாகாணத்திற்கு உதவிபுரிய இருக்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment