ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி 208பி மற்றும் 208பி/2 ஆகிய பிரிவிலுள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ஒட்டமாவடி தேசிய பாடசாலையில் கொவிட்19 தடுப்பூசிகள் இன்று வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அறுபது வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தங்களது உயிரினை கொடிய கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளவும். இந்த தடுப்பூசி தொடர்பில் ஏதும் சந்தேகங்கள் இருப்பின் தடுப்பூசி நிலையத்தில் உள்ள வைத்தியரை அல்லது பொது சுகாதார பரிசோதகரை அனுகி இது தொடர்பான விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும் என ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad