வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதமை காரணமாக நாடாவிய ரீதியில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடையாற்றும் சுகாதார பணிக்குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் வைத்தியசாலை முன்பாக அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வைத்திய சேவைக்கு ஒப்பான ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் 78 சதவீத கொடுப்பனவினை வழங்கு, பொது நிருவாக அறிக்கையின் படி அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்கு, மேலதிக நேர கொடுப்பனவை தாமதமின்றி வழங்கு, சுகாதார சுற்றிக்கையின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதன் படி மகப்பேறு சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்கு, கொவிட் 19 ஆட்கொல்லிக்கு முதலில் பலியாவது தாதியர்களா?, அனைத்து சுகாதார ஊழியர்களையும் ஆட்சேர்ப்பு செய், வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad