பேஸ்புக்கில் போலி செய்திகளை பதிவிட்ட முகாமையாளர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

பேஸ்புக்கில் போலி செய்திகளை பதிவிட்ட முகாமையாளர் கைது

கொரோனா தடுப்பூசி 5000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனது முகநூலில் தகவல் பிரசுரித்த தேயிலை தொழிற்சாலை ஒன்றின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலவான தபஸ்ஸரகந்த வித்தியாலயத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் மத்திய நிலையத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சுகாதார விதிமுறைகளுக்கமைய முறையான திட்டத்தின் கீழ் வாக்களிப்பு நிலையங்களுக்குப் பொதுமக்கள் அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

எனினும் இந்த நபர் தடுப்பூசி வழங்கும் ஒழுங்குகளை குழப்பும் வகையில் ஈடுபட்டு அமைதியின்மையை ஏற்படுத்தி அதிகாரிகளின் கடமைக்கு தடையாக நடந்து கொண்டதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தேயிலைத் தொழிற்சாலை முகாமையாளர் தனது பேஸ்புக் கணக்கில் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுக்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரி 5000 ரூபாய் பணத்தைப் பெற்று தடுப்பூசியை வழங்குவதாக பதிவிட்டுள்ளார். 

இதனையடுத்து இவருக்கு எதிராக கிராம சேவை அதிகாரி கலவான பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி நிருபர்

No comments:

Post a Comment