சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் வாகன அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் திகதி எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் காெவிட் நெருக்கடி நிலை காரணமாக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இரத்தினபுரி மாவட்ட பிரதான செயலாளர் றஞ்சனீ ஜயகொடி நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களின் சகல பிரதேச செயலகங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலகம் ஆகியவற்றில் வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படுகின்றன.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக வாகன அனுமதிப்பத்திரம் விநியோகம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
எனினும் இவ்விடயங்களில் அதிகமான பொதுமக்கள் ஒன்று சேர்வதால் வைரஸ் தொற்று பரவும் அவதானம் அதிகமாவதை தடுக்க இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய இத்தினங்களில் வாகனங்களின் அனுமதிப்பத்திரம் பெறும் நிலையில் உள்ளோருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதியே அவற்றை பெற்று கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் உரிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளத்தவறியவர்களுக்கு உரிய சலுகை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
(பலாங்கொடை, இரத்தினபுரி நிருபர்கள்)
No comments:
Post a Comment