மேலும் பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

மேலும் பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் மேலும் பல சேவைகளை அத்தியாவசியமானது என்று அறிவித்து புதிய வர்த்தமானி அறிவிப்பானது நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

கீழ்காணும் சேவைகள் வழங்கலில் ஈடுபடும் எந்தவொரு அரச கூட்டுத்தாபனத்திலிருந்து அல்லது அரச திணைக்களத்திலிருந்து அல்லது உள்ளூராட்சி நிறுவனத்திலிருந்து அல்லது கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து அல்லது அவற்றின் கிளைகளிலிருந்து வழங்கப்படும் சேவைகள் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது எனக் கருத்தில்கொண்டு, அந்தச் சேவைகளை வழங்குவதற்கு இடையூறு அல்லது தடைகள் ஏற்படக்கூடும் என்ற காரணத்தினாலும் மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்புச் சேவைகள் கொவிட்-19 தொற்றுப் பரவல் நிலைமையினால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய இணைந்த சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட்-19 நோய்த் தடுப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் கவனத்தில் கொண்டு பின்வரும் அரச சேவைகளை, ஜூன் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியினால் பிரடனம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment