இலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை - News View

Breaking

Post Top Ad

Friday, June 18, 2021

இலங்கையில் தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு : மாகாணங்களிடையே போக்குவரத்து தடை : ஒன்றுகூடல், கூட்டங்களுக்கு அனுமதியில்லை

தற்போது அமுலில் உள்ள, பயணக்கட்டுப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஜூன் 21, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறு நீக்கப்படும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 23, புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு, ஜூன் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்குமென அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன், பயணக்கட்டுப்பாடு தளர்தப்படும் காலப் பகுதியில், மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பது, பொதுமக்கள் ஒன்றுகூடல்கள், கூட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கும் தொடர்ந்தும் தடை விதிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதான, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

பௌத்தர்களின் விசேட தினமான பொசொன் பௌர்ணமி தினம் எதிர்வரும் ஜூன் 24ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், குறித்த தினத்தில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad