ஐ.தே.கட்சி, சிறிகொத்தாவை கைப்பற்றுவதாக கூறியவர்களுக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வதே சவாலாகியுள்ளது - வஜிர அபேவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

ஐ.தே.கட்சி, சிறிகொத்தாவை கைப்பற்றுவதாக கூறியவர்களுக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வதே சவாலாகியுள்ளது - வஜிர அபேவர்தன

(எம்.மனோசித்ரா)

உலகத்தில் எந்தவொரு தலைவரும் தனது பதவிக்காக ஏனையவர்களிடம் நம்பிக்கையை கோரியதில்லை. இலங்கை வரலாற்றிலும் இதுபோல் நடந்ததில்லை. அந்தளவிற்கு தற்போதைய எதிர்க்கட்சி அரசியல் ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிப்பவர் அந்த பதவிக்கான நம்பகத் தன்மையை வெளிப்படுத்துவதை விட பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளுக்காக மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், இலங்கையைப் போன்று உலகத்தில் வேறு எந்தவொரு எதிர்கட்சி தலைவரும் இவ்வாறு தன் மீதான நம்பகத்தன்மையை பரிசீலிக்க வில்லை. 

ஐக்கிய தேசிய கட்சியையும் அதன் தலைமையகமான சிறிகொத்தாவையும் கைப்பற்றுவதாக கூறியவர்களுக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வதே சவாலகியள்ளது.

தலைமைத்துவ போராட்டத்திற்கு சிதைந்து போய் கிடக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, சம்பிக ரணவக்க போன்ற தலைவர்களுக்கு வாய்ப்பளிப்பதாகவே அமைகின்றது.

ஆனால் இந்த சிக்கலுக்குள் ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் செல்லாது. மக்களின் பிரச்சினைகளை கவனத்திற் கொண்டு அவற்றை தீர்த்து வைக்க தேவையான அழுத்தத்தை மக்களுக்கு கொடுப்போம். மிக குறுகிய காலத்தில் தற்போதைய எதிர்க்கட்சியும் அதிகார போராட்டத்திற்குள் சிக்கியுள்ளது.

மறுபபுறம் அரசாங்கமும் பெரும் நெருக்கடிக்குள் சிக்கி மக்களின் செல்வாக்கை இழந்து வருகின்றது. எனவே இங்கு ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியத்துவமும் அவசியமும் உணரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment