யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் (திங்கட்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்றைய தினம் குருநகர் பகுதியில் யாழ். பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தினர்.

நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு மேலதிகமாக அங்கு பலரும் ஒன்று கூடியதால் தனிமைப்படுத்தியதாக யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment