யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ஒரேநாளில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு! - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ஒரேநாளில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஐவர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஒன்பது மணி வரையான 24 மணிநேரத்தில் இந்த உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் அரியாலையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆணும், புத்தூரைச் சேர்ந்த 48 வயதுடைய ஆணும், பலாலியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆணும், கோப்பாயைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது.

No comments:

Post a Comment