குடியிருப்புக்குள் புகுந்த முதலை வனஜீவராசி அதிகாரிகளினால் மடக்கிப் பிடிப்பு! - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

குடியிருப்புக்குள் புகுந்த முதலை வனஜீவராசி அதிகாரிகளினால் மடக்கிப் பிடிப்பு!

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா - 03 சவேரியார்புரம் பகுதியில், இன்று (23.06.2021) காலை, கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் அறிவித்ததனைத் தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று முதலையினை மீட்டுள்ளதுடன், உன்னிச்சை காட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவித்துள்ளனர்.

குறித்த முதலை சுமார் 6 அடி நீளமானது என குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad