குழந்தைக்கு சுகயீனமெனக் கூறி காரில் போதைவஸ்து வியாபாரம் செய்த இருவர் கண்டியில் கைது : பணம், போதைப் பொருள், வாகனம் பறிமுதல் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

குழந்தைக்கு சுகயீனமெனக் கூறி காரில் போதைவஸ்து வியாபாரம் செய்த இருவர் கண்டியில் கைது : பணம், போதைப் பொருள், வாகனம் பறிமுதல்

தங்களது 5 வயது குழந்தைக்கு சுகவீனம் எனக்கூறி, குழந்தையை காரில் ஏற்றிக் கொண்டு போதைப் பொருள் வியாபாரம் செய்த இருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள், கண்டி லுயிஸ் பீரிஸ் மாவத்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆணும் பெண்ணுமாக இரு சந்தேக நபர்களை நேற்று முன்தினம் (9) இரவு கைது செய்தனர்.

37 மற்றும் 29 வயதுடைய இவர்கள் பேராதனை, அம்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

பொலிஸாரினால் கைது செய்யப்படும் பொழுது ரூபாய் 22 இலட்சம் ரொக்கம் மற்றும் 60 கிராம் போதைப் பொருளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து தடைகள் இருந்த போதிலும், தம்பதியினர் ஐந்து வயது குழந்தையை ஒரு துணியில் போர்த்தி பொலிஸாரின் கவனத்தை திசை திருப்பி இக்குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெண்ணின் முதல் திருமணத்தில் பிறந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு சுகயீனமெனக் கூறி, அந்தக் குழந்தையை காரில் ஏற்றிக் கொண்டு இவர்கள் இருவரும் நகரின் பல பாகங்களில் போதைப் பொருள் விநியோகித்தமை விசாரணைகளில் தெரியவருக்கின்றது.

சந்தேக நபர்கள் கண்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர் எனவும் இவர்கள் கண்டி பகுதியில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் சுமார் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியாது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பிரதசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷமில் ரத்நாயக்க தலைமையில் கண்டி பொலிஸ் நிலைய போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

(எம்.ஏ.அமீனுல்லா)

No comments:

Post a Comment

Post Bottom Ad