மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருநாளில் 145 பேருக்குக் கொரோனா

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஒருநாளில் 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தொடர்ந்து அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் எழுமாறாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், மட்டக்களப்பு மாநகர சுகாதாரப் பிரிவில் 23 பேருக்கும் களுவாஞ்சிக்குடி சுகாதாரப் பிரிவில் 19 பேருக்கும், வாழைச்சேனை பிரிவில் எட்டுப் பேருக்கும் காத்தான்குடி மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதாரப் பிரிவுகளில் தலா இருவருக்கும் கொாரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், ஓட்டமாவடி பிரிவில் எட்டுப் பேருக்கும், செங்கலடிப் பிரவிலி 14 பேருக்கும், ஏறாவூர் சுகாதார பிரிவில் 25 பேருக்கும், வெல்லாவெளி பிரிவில் 17 பேருக்கும் ஆரையம்பதி பிரிவில் 10 பேருக்கும், கிரானில் 10 பேருக்கும் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைவிட, விமானப்படை வீரர் ஒருவர் உட்பட 145 பேருக்கு நேற்று கொரானா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பயணைத் தடையை மீறி, வீட்டிலிருந்து தேவையின்றி வெளியில் செல்லவேண்டாம் என மருத்துவர் மயூரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment