கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களை வெளியிடுவதில் புதிய முறைமை ஒன்று பின்பற்றப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இனிமேல் கொரோனா வைரஸ் மரணங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும்போது கடந்த 48 மணி நேரம் அல்லது 24 மணி நேரத்துக்குள் இடம்பெறும் அனைத்து மரணங்களும் அன்றைய தினத்திலேயே வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் தொடர்பான தகவல்கள் புதிய முறைமையின் கீழ் வெளியிடப்படமாட்டாதென்பதையும் அவர் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்; இதற்கு முன்னர் நாம் தினமும் கொரோனா வைரஸ் மரணங்களை வெளியிடும்போது கடந்த தினங்களில் இடம்பெற்றுள்ள மரணங்களையும் சேர்த்தே முழுமையாக தெரிவித்து வந்துள்ளோம்.
அதற்கு நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டுவர தீர்மானித்துள்ளதுடன் நேற்று முதல் கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெறும் மரணங்கள் அனைத்தையும் அதே தினத்தில் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதன்படி ஒரு நாளில் இடம்பெறும் மரணங்கள் அனைத்தின் விபரங்களை வெளியிடுவதற்கு நாம் தற்போது புதிய நடைமுறை ஒன்றை தயாரித்துள்ளோம்.
கடந்த 48 மணித்தியாலம் மற்றும் 24 மணித்தியாலங்களில் இடம்பெறும் மரணங்கள் அனைத்தையும் அதே தினத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment