இலங்கையில் கொவிட் தொற்றால் 8 நாட்களான குழந்தை உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

இலங்கையில் கொவிட் தொற்றால் 8 நாட்களான குழந்தை உயிரிழப்பு

கொவிட்-19 தொற்றால் மிகவும் இளம் வயது உயிரிழப்பு சம்பவம் ஒன்று கம்பளை பகுதியில் பதிவாகியுள்ளது.

அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளான எட்டே நாட்களான ஆண் குழந்தையொன்று கம்பளை, புஸ்ஸல்லாவ பகுதியில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

கடந்த மே 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தது.

வீட்டிற்கு வந்தவுடன் குழந்தை வாந்தியெடுத்தது. அதன் பின்னர் மீண்டும் குழந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டது.

குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்து விட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு வைரஸ் பாதித்திருக்கலாம் என்று வைத்தியசாலை வைத்தியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி கொவிட்-19 காரணமாக 20 நாள் குழந்தை உயிரிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad