மஜ்மா நகரில் இதுவரை கொரோனாவினால் மரணமடைந்த 660 உடல்கள் அடக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 17, 2021

மஜ்மா நகரில் இதுவரை கொரோனாவினால் மரணமடைந்த 660 உடல்கள் அடக்கம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்த உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்" அமைந்துள்ள கொரோனா மையவாடியில் நேற்று புதன்கிழமை (17.06.2021) மாலை வரை 660 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்" அமைந்துள்ள கொரோனா மையவாடியில் நேற்று 17.06.2021 வரை 622 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கப்பட்டுள்ளதுடன் 15 இந்து உடல்களும், 14 கிறிஸ்தவ உடல்களும்; 07 பௌத்த உடல்களும், 02 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 660 உடல்கள் அடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment